[250 ] அகழ்வாராய்ச்சி முடிவுகள் ..
2175-ஆம் ஆண்டு
தொல்பொருள்
ஆராய்ச்சியர்
தோண்டிக்கொண்டு நின்றனர்!
முதுமக்கள் தாழிகள் இரண்டு
மெதுவாக எடுத்தனர்!
ஒன்றின் உள்ளே
சேலை சுற்றிய
எலும்புக்கூடு!
சுற்றிலும் இருந்தவை:
மின்விசிறி, மாவாட்டும் எந்திரம்,
மிக்சி என்னும் சிறு அரவை எந்திரம்,
எரிவாயுஅடுப்பு, தொலைக்காட்சிப் பெட்டி
இரண்டாவதில்
வேட்டி சுற்றிய
எலும்புக் கூடு
வாயில் சுருட்டு போன்ற பொருள்,
கையில் காலியான புட்டியுடன்;
ஆராய்ச்சியாளர்கள்
முடிவுகளை அறிவித்தனர்:
கி.பி. 2000-இல்
மக்கள் நவீன
வீட்டு உபயோகப்
பொருட்களெல்லாம்
உபயோகித்தவர்களாகச்
சிறப்பான ஆட்சியின்கீழ்
மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்! என்று
-0-
பின்குறிப்பு: அவர்களுக்குத் தெரியாதது:
கணவன் டாஸ்மாக்கின்
விஷ போதையில் இறந்து கிடக்கையில்
மனைவி இலவசப் பொருட்களுக்கான
தள்ளு முள்ளில் அகப்பாட்டு
மிதிபட்டு அரசு ‘ஆம்புலன்சில்’
இறந்துவிட அவர்கள் இருவரையும்
அவர்களுக்குக் கிடைத்த
இலவசப் பொருட்களுடன்
ஊர்மக்கள் புதைத்திருந்தார்கள் என்பது!
[இதை ஒரு கவிதை என்று வெளியிடுவதில் வெட்கப்படுகிறேன்]