கரகாட்டம்
ஒப்பனை குறையாமல்
அலங்கரிக்கப் பட்ட கரகமும்
அசையாத தலையும்
செந்தாழையைக் குழைச்சு
மையிட்ட கண்களும்
கோயில் மணி மூக்கும்
வெற்றிலைக் கரையேறிய
செவ்விதழ்களும்
கயலையும் வியக்கும் கண்ணசைவும்
துள்ளி துள்ளி மின்னி மின்னி வரும்
விண்மீன்களைப் போல ...
ஒய்யாரமாய் ஒயிலான நடையும்
நிமிர்ந்த வார்த்த பிறை நெற்றியும்
நளினமான கடைப் பார்வையும்...
கண்ணைப் பறிக்கும் கவர்ச்சிகரமான
உடையணிந்து கட்டியதால் கட்டழகும்
ஒடித்து ஒடித்து நடக்கும்
ஒடியாத கொடியிடையினையும்...
தனித்து வளைந்து கிடந்த
படகு போல ஒட்டிய வயிறும்
இவர்கள் நளினம் கூறும்
கடுக்காத கடியாத நடையும்...!
அன்னக் கால் சதங்கையும் அவர்கள்
காணாத உலகமும்
அனுபவத்தின் புதுமையாக ...
மானத்தோடு வாழும் வாழ்க்கையும்
இவர்களின் தன்னம்பிக்கையுடன்
கலைகளை வளர்க்கும்
நாடோடித் தமிழர்கள் தான்
இன்றும் பண்பாடும் கலாச்சாரமும் குறையாமல் ....!