தூண்டில்....

வாழ்கை எனும் ஓடம்,
அதில்,
வாழ்பவர் காண்பர் ஓட்டம்......மீன்களாய்

நீரில்,
செழிப்பாய்
துள்ளித் திரியும் சில உயிர்கள்,
உழைப்பை
கொட்டித் தீர்க்கும் பல உயிர்கள்,
களைப்பை அஞ்சி
உழைக்கா வாழும் பல உயிர்கள்,
மலைப்பை உண்டாகும்
பொருளை உடைய சில உயிர்கள்....

வாழும் நாட்கள்,
வயதால் அறிவோம்...
வாழ்கை நோக்கம்,
உழைப்பால் உணர்வோம்....
இறக்கும் மீன்கள் தூண்டில் பிடிப்பால்,
இயங்கும் வாழ்க்கை அதனைச் சார்ந்து....

இறைவன் படைத்த தூண்டிலானவன்,
உயிர் எடுப்பான்,
உயிர் கொடுப்பன்,
வெற்றி அளிப்பன்,
தோல்வி படைப்பான்,
மானம் காப்பான்,
மாண்பைக் குலைப்பான்,
அதிர்ஷ்டம் அளிப்பான்,
ஆழ்குழியில் தள்ளுவான்....

உயர்தல் தாழ்தல் இல்லை
மனிதன் கைகளில்...
அவனின் நிலை,
இறை வகுத்த தூண்டிலால்...

எழுதியவர் : பிரதீப் (6-Jun-12, 2:21 pm)
பார்வை : 213

மேலே