அதிகாலை

பகல் நேரக் காதலன் அதிகாலையை கலைக்க ஆயத்தமாகிறான்,
குலமகள் திருமகளைக் கொண்டு கோலமிடுகிறாள், எறும்பினது,
தேனீரை தேவாமிர்தமாக கருதும் கூட்டம் தெருமுனையில் நாயர் கடையினில்,
பனியின் மழையில் நனைந்து துவட்ட துண்டில்லாமல் தொப்பலாக நிற்கும் புற்களும்,
பூமிக்கு பாரமாய் தன்னை கருதும் பனித்துளி சூரியனிற்கு குடிப்பெயர்வதும்,
அழகான வெண்ணிறத்தோனை அணைத்து கதிரவன்
கதிர்களால் காட்சி அளித்தவுடன்,
பஞ்சாய்ப் பறந்தது அதிகாலை எனும் ஆனந்தப் பொழுது.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன். (6-Jun-12, 4:42 pm)
சேர்த்தது : த.பொன்மாரியப்பன்
பார்வை : 268

மேலே