பூ - ஹைக்கூக்கள்

இறுதி ஊர்வலத்தில் 
நானும் இறக்கிறேன் 
அழகிய தோரணம் 

அழுகும் உடலுக்கு 
மணக்கும் மரணம் 
பூமகள்...!

ஓர் வயிற்று பூக்கள் 
உலகெங்கும் 
வேடந்தாங்கலாய்

பருவ  மொட்டுக்கள்    
பாதை மாறியது 
சிவப்பு விளக்கில் 

காற்றின் தாலாட்டில் 
கைதியானது 
மலர்கள் 

தீண்டும் மனங்களுக்கு 
முத்தமிட்ட  பூவிதழ்கள்   
தீயாக மனப்பான்மை

நறுமண மலர்களுக்கு
தூக்குத் தண்டனை 
நாரில்    

பல வண்ண மலர்கள் 
பாதை மாறியது 
என்றும் சுமங்கலி

கதம்ப மலர்களுக்கு 
புண்ணிய தரிசனம் 
கடவுளின் காலடியில்  

சூரியன் எரிக்க  
தாமைரை சிரிக்க 
நடனமாடியது நீர் 

முள்ளின் தவம் 
காதலர் தினத்தில் 
வரம்

ஆனந்த தாண்டவத்தில்  
அகிம்சை பூக்கள் 
இல்லறம் நல்லறம் 

வெள்ளிக் கொலுசில் 
ஜதிபாடும் மல்லிகைப் பூக்கள் 
வெக்கத்தில் நிலா 

சிறையில் பூக்கும் 
மொட்டுக்கள் இரையாகிறது 
மண்ணில் …!


சூரியன் அணைப்பில்   
விரிந்தது மொட்டுகள் 
இறந்தது காதல் 

வெடித்த விதைகள் 
ஸ்பரிசம் 
சுதந்திரத்தில் 

வண்டிற்கு தேன் 
கவிஞருக்கு மோதல் 
வெற்றியில் மரணம்  

தாமரை பூக்கள் 
மலர்ந்திருக்கிறது 
தேவாலயம் 

மாணிக்க இதழ்களின் 
சுவையை திருடியது 
மகரந்த பூக்கள் 

இலையின் காதல் 
மலருக்கு தெரிவதில்லை 
இன வேற்றுமையில் 

ஆண் பெண்
புரியா தோட்டத்தில் 
ஆதம் ஏவாள் பூக்கள் 

ஓர் நாள் 
முதல்வர் 
பூக்கள் 

தேன் பூ வண்டுக்கு 
காதல் சொல்லி தந்தது 
பட்டாம்பூச்சி 

விடுமுறை தோட்டத்தில் 
வெள்ளைப் பூக்கள் 
கணவனை இழந்த பெண்

எனது பெயரில்
எத்தனை உயிருள்ள மலர்கள் 
நீண்ட ஆயுளில் 

சுதந்திரத்  தோட்டத்தில் 
நிரந்தரப் பூக்கள் 
தியாகிகள் வரிசையில் 

எனக்கு  இறந்த நாள் 
உனக்கு பிறந்த நாள் 
என்பாவம் உன் புண்ணியம் 

வழியனுப்பும் 
சாலைப் பூக்கள் 
உடன்கட்டை வரவேற்பு 

எழுதியவர் : ஹிஷாலீ (6-Jun-12, 2:36 pm)
பார்வை : 347

மேலே