எங்கே நீ எங்கே

ஆண்,
எங்கே என் வெண்ணிலவே, நீ எங்கே வானில் இல்லை,
மண்ணில் மையம் கொண்டுள்ளாயா,
உன்னை காணத்தான் கண்களை கொண்டு காணலாயினேன்,
உன்னை சேரத்தான் இவ்வுயிரை கொண்டேன்,
உந்தன் கரம் பிடிக்கத்தான் காதல் கொண்டேன்,
எங்கே நீ பனித்துளிகளுக்கு நடுவே ஒளிந்துக் கொண்டாயா,
பூக்களுக்கு நடுவில் புகுந்து கொண்டாயா,
அறியவில்லை நான் தெரியவில்லை நீ எங்கே என் காதலே,
பெண்,
காதலா கண் முன் தோன்றுவாயா காத்துகிடக்கிறேன் கன்னி,
நரம்புகளிடையே ஓடும் இரத்தத்தினில் கலந்துவிட்டாய் நல்லவனே,
என் இதயத்தின் இமயத்தில் அமர்ந்துவிட்டாய் இம்மைக் காதலனே,
கண் மூடும் நேரத்தில் மட்டும் தோன்றுகிறாய் முன்னே,
திறக்கும் நேரத்தில் எங்கே செல்கிறாய் காதலே,
ஆண்,
உன்னைக் காணவே வானத்தில் வலை வீசினேன் சில விண்மீங்களே
சிக்கியது என் பொன் மீன் சிக்கவில்லை,
என் காதல் மழையில் நனைந்து என்னுடன் கவி பாட வருவாயா கண்மணியே,
பூஞ்சோலைகள் எல்லாம் என் புகலிடமாகின்றன உன்னைத் தேடி.
பெண்,
நான் வானத்தில் இருந்து விடுபட்டேன் உன் மனச்சிறையில் மாட்டவே,
பூஞ்சோலைகளில் தேட தேவையில்லை என்னை உன் புன்னகையிலே இருக்கிறேன் நான்,
உன்னைத் தேடுகிறேன் நான் உன்னையே தேடுகிறேன் எங்கே நீ எங்கே.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன். (6-Jun-12, 4:51 pm)
சேர்த்தது : த.பொன்மாரியப்பன்
Tanglish : engae nee engae
பார்வை : 254

மேலே