இறுதி அதுவல்ல!

நேற்று கடந்து போன இரவு
காற்றுடன் அழுது போனது -கல்லறை
கடவுள்கள் கனவில் வந்து போனார்கள்
கேள்விகள் பல கேட்டு சென்றார்கள் !

குருதி சிந்திய கொள்கையை
மறதி கொண்டீரோ?-மூடரே
ஓய்வு கொண்ட நாட்களை
இறுதி என்று நினைத்தீரோ ?

உறுதி எடுத்துக்கொள் தோழா
இறுதி அதுவல்ல!
பரவி அடி நடக்கும் எம்
குருதி குடித்தவனின் உயிர்
துடிக்க மறக்கும் !

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (7-Jun-12, 12:28 pm)
பார்வை : 213

மேலே