உன் குளிரிலாவது குளிர் காய்கிறோமே ...?!

வெண்ணிலவே ..!
என்னவள் பால்கனியில் உலவுகின்றாளா..?
வெட்கத்துடன் மேகத்துக்குள் மறைகிறாயே..!
இதோ..உடனே அலைபேசியில் அழைத்து
அவளை உறங்க சொல்கிறேன் ...
நீ வெளியே வா ....வெளிச்சமாவது வரட்டும் ..
இங்கே எம் தமிழ் தேசத்தில் ..
இரவுகளில் விளக்குகள் ..
வீட்டுக்கும் வருவதில்லை ...
வீதியிலும் உலவுவதில்லை ..!
புழுங்குகிறோம் வெம்மையில் ...
உன் குளிரிலாவது குளிர் காய்கிறோமே ...?!
வெண்ணிலவே வெளியே வா ...
என்னவள் என் கனவுகளுடன் ...உறங்குகிறாள் ..!
தென்றலாய் என் கவிதைகளை
விசிறிக்கொண்டே நான் வானம் நோக்கி ..!?

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (8-Jun-12, 12:07 am)
சேர்த்தது : R.Arun Kumar
பார்வை : 194

மேலே