அல்கா கல்கா

கல்லுக்கா. அல்லுக்கா. ஏண்டா சின்னப்பையா உன்

பேத்திங்களுக்கு தமிழ்ப் பேருங்க எதுவுமே கிடைக்கலையா.

அல்லுக்கா, கல்லுக்கானு உன் பையன் பேரு வச்சிருக்கிறான்,

@@@@@@@

காலம் மாறிப் போச்சு யக்கா. எம் பேரு சின்னப்பையன். நான்

வெளில போறபோது வெளையாட்டுப் பசங்கள் எல்லாம் "இதோ

பாருங்கடா சின்னப்பையன் போறாரு"னு கிண்டல் பண்ணறாங்க.

"மீசை தாடி நரச்சுப்போன இந்தத் தாத்தா பேரு

சின்னப்பையானாம். என்ன அநியாயம்டா"ன்னு பசங்க

பேசிக்கிறாங்க, எம் பையன் சுரேசு எனக்கு ஒரு இந்திப் பேரை

வச்சு எம் பேரை அதிக்காரப் பூர்வமா மாத்தறதாச் சொன்னான்.

நாந்தான் இந்த வயசிலே எம் பேரை மாத்தினா நல்லா

இருக்காதுன்னு சொல்லி அவனைத் தடுத்துட்டேன். யக்கா எம்

பேத்திங்க பேரு அல்லுக்கா, கல்லுக்கா இல்லை. 'அல்கா, கல்கா'.

அருமையான இந்திப் பேருங்களாம். அந்தப் பேருங்களுக்கு என்ன

அர்த்தமோ நமக்கென்ன? இந்திப் பேருங்களா இருக்குதே அதே

நமக்குப் போதும். பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேருங்களை

வச்சத்தான் நம்ம தமிழ் மக்கள் கேவலமா நெனைக்கிறாங்க.

இந்திப் பேரை வைக்கிறவங்க தான் உண்மையான தமிழர்களாம்.

என்ன செய்யறது யக்கா. நம்ம தமிழ் மக்கள் பெரும்பாலோர்க்கு

தன்மானம் கடுகளவும் கிடையாது. இந்தியைப் பேசறவங்க நம்மள

எவ்வள்வு கேவலமா நெனைப்பாங்க. ஒண்ணும்

சொல்லறதுக்கில்லை. வெட்கக்கேடு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Alka = Bright, Shining. Sanskrit feminine name,

Kalka = Pupil of the eye.

எழுதியவர் : மலர் (22-May-24, 10:14 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 38

மேலே