(கவிதை திருவிழா போட்டிக்காக எழுதிய) தேவை ஒரு விவசாய புரட்சி...

தலைப்பு..!
1 . தேவை ஒரு விவசாய புரட்சி...
2 . இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்...
3 . சே குவேர - ஒரு மாமனிதன்
4 . சமூக அவலங்கள்
5 . ஒப்பில்லா உழவு...

தேவை ஒரு விவசாய புரட்சி...
(கவிதை திருவிழா போட்டிக்காக எழுதிய)

நெசவாளன் நெற்றித்திரை
வானில் ஓற்றை துளினீர்
உலகமழை பொழிய தேவை?
ஓர் விவசாய புரட்சி..!

உலகத்து உருண்டைக்குள்
ஓராயிரம் உழவர்கள் நெளிந்தூர,
அவர்களுக்கு பாராயிரம் பண்பாட,
தேவை ஓர் விவசாய புரட்சி..!

ஏர் பிடித்துழும் காளை
நாளை, வாலை தூக்கி
ஏழை குடிசைக்குள்
தங்கச்சாணம் விழ
தேவை ஓர் விவசாய புரட்சி..!

வேருக்குள் கீழ்லமர்ந்து
மண்ணினை மாற்றும்
மண்புழுவிற்க்கு இருக்கும்
ஒத்துமையும் உழைப்பும்..
பாரினுல் பாதிப்பேரிடம்
இல்லையே அதுதான் எங்கள்
புரட்சியின் எல்லையே..!

வாடா மனிதா... வா...?
வந்து நீர்பார் எங்கள்
விவசாயின் குடிலை,
நாற்றம்கொண்ட நாங்களில்லையே.?
ஏற்றப் பணக்காரன் நீயும்மில்லை..
வாடா மனிதா வாடா..!
விவசாய புரட்சிக்கு வித்திட வா...!
என்றுச்சொல்லி..?

தலையில் தலைப்பைகளுடனும்,
கையில் கலைப்பைகளுடனும்,
கழனியில் கருவேள வெயிலிலும்,
கனத்த மழையிலும்,
எதிர்கால இந்தியாவின் விவசாயம்,
எழுந்தேர கனவுகளோடு போராடிய,
சோஷலிச புரட்சியாளன்..!
சே குவேராவின், பிறந்த நாளோடு..!
விவசாய புரட்சி விடியல் பெறட்டும்..!
விவசாயிகளாகிய எங்களின் புன்னகை
மலரட்டும்...
இவ்வுலகம்,
ஏர்பிடிக்கும் ஏழைகளை,
ஏரெடுத்து பார்க்கட்டும்..!

அன்புடன் அரபு நாடிலிருந்து
ஏழை விவசாயின் மகனான,
மதுரை கருப்பு வாசகம்..!

எழுதியவர் : மதுரை வாசகம் (7-Jun-12, 1:49 pm)
பார்வை : 563

மேலே