தேவை ஒரு விவசாயப் புரட்சி

நெல் மணி
முதன் முதலில் சீனாவில்
என்றும்
இந்தியாவில் என்றும்
தோன்றியதை
இருவேறு கருத்துக்களிடையே
போட்டியே இருந்தது
கிரேக்க அறிஞர்களிடம்

இவர்களின் கூற்றுப்படி
நெல் மணி இந்தியாவில் தான்
முத்னமுதலில்
சிறந்த முறையில் பயிரிட்டு
செழிப்படைந்தது
என்ற உண்மையை வெளிப்பாடுதியவர்
பிளேட்டோ அரிஸ்டாட்டில் !

ஒரு முறை பயிர் செய்யப்பட்ட
நெற்பயிர் இந்தியாவிலிருந்து
மேற்கிலுள்ள நாடுகளான
பெர்சிய,எகிப்து ஆகிய
நாடுகளுக்கும் பரவியது.
நம் நாட்டின் பெருமையும்
அன்றே ! வெளி நாட்டவரிடம்
சேர்ந்ததே !

ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவத்
தொடங்கிற்றே!
நம் இந்தியாவில் தான்
அன்றே!
மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டதே
விவசாயம் எனும்
விவசாயப் புரட்சி !

இனி நிலவில்தான்
வேண்டுமானால்
புரட்சி ஏற்படலாம்
ஆனால்!
நாம் இன்று வரை
விவசாயத்தை
பாது காக்கத்தானே
இன்றும்
புரட்சியாய் வெடித்துக்
கொண்டு இருக்கிறோம் !

வள்ளுவன் வாக்கின் படி
உழவினார் கைம் மடங்கின் இல்லை விழைவதுஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை .
என்கிறார்

உழவர்கள் தம் முயற்சிகளை செய்யாது
கைவிட்டு விட்டால் 'ஆசைகளையெல்லாம்
விட்டோம்' எனும் துறவியர்க்கும் உயிர் நிலைத்தல் இல்லையாம் அன்று..

இன்று!
மாறி விட்டது
எல்லாம் எந்திரமாய்
மனிதனும் எந்திரமாய்...!!






`

எழுதியவர் : செயா ரெத்தினம் (9-Jun-12, 3:57 am)
பார்வை : 319

மேலே