இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்
இரவார் இரப்பார்க்கொன் ரீவர் கரவாது
கைசெய் தூண் மாலை யவர் .
உள்ளத்திலே வஞ்சகம் இல்லாமல்,
உழைத்து உண்ணுகின்ற
வெற்றிமாலையினரான
உழவர்கள் தம் இரவார்.!
தம்பால் இறப்பவருக்கோ,
கொடுத்தும் மகிழ்வார்.
என்கிறார் வள்ளுவர்.
வள்ளுவர் கூற்றின்படி
விளை நிலங்கள் எல்லாம்
வீடானால்
நம் வயிற்றுக்கு உணவு?
எலிகளும் ,பாம்புக்கரியும் தான் மிஞ்சுமோ?
வானம் பார்த்த
பூமியெல்லாம்
மழையை நம்பி
காத்துக் கிடக்க!
காவிரியின் துளிகள்
தேடி அலையும்
விவசாய மனிதன்
வீட்டில்
பாத்திரம் உருளும்
பூனையின் வயிறு காய!
எலி கூட மிஞ்சாமல்
வானம் வறண்டால்
பூனைக்கு ஏது
உணவு?
விவசாயம் நம்பும்
மக்களுக்கு
மழை நீரும்,ஆற்று நீரும்
பாசனத்திற்காக
என்றால்
அதற்கு ஏன் போராட நீ
மட்டும் தானா?
இந்திய மொழிகள்
தேசியமயமானால்
நதிகளும் தேசியமயமாவது
ஏன்?உனக்கு
இரககம் இல்லை .
இயற்கையைத் தடுக்க
யார் நீ?
மழையாக பொழிய
நீ
உருவெடுத்தையா?
உருவாக்கிநாயா?
மின்சாரம் ஒரு புறம்
நம்மை
ஏமாற்றி ஏமாற்றி
பிரிதெடுக்கிறது
வாழக்கையை!
நாடு செழிக்கனும் என்றால்
வீடு செழிக்கனுமப்பா!
வீடு செழிக்கனும் என்றால்
விவசாயம் பெருகனுமப்பா!
நாடு உயர கோல்
உயரும்
கோல் உயர
கோன் உயர்வான்
எப்போது?
விவசாய நண்பனே!
நீ போராடு?
வெற்றிக்கனி
கிட்டும் வரை!
நிமிர்ந்து நில்!
காற்றும் நீரும்
நம் வசம்
வேறெங்குமில்லை
நேசம்!
அயலாரை வீழ்த்த
நீ பாடுபடு!
உன் புரட்சியை
எழுப்பி விடு
அயர்ந்து விடாதே !
என்றென்றும்
விவசாய நண்பா!
காப்பாற்று!
இந்தியாவின்
முதுகெலும்பை
நீ!