சமூக அவலங்கள் (2 ) (கவிதை திருவிழா)
மாரிக்காலம் மருகுதே -எம்
உழவன்
உழைப்பு கருகுதே!
புயலும் மண்ணை புரட்டுதே -அவன்
பிழைப்பில்
மண்ணெண்ணெய் ஊத்துதே!
நெல்லு விதைச்சா
புள்ளா போகுதுன்னு
கொள்ளு விதச்சான் -அவன்
கொள்முதல்
வீடுவந்து சேரலையே!
மனுசன
மனுஷன் ஏய்க்கிறான்
மாடாத்தான் -அவன்
நடத்துறான்!
கிராமமும்
இங்க குறையுதே!
இளவட்டம் வெளிநாட்டுக்கு
அடிமாடா
போகுதே!
பெருசுக
மட்டும் முளிக்குதே!
விடாம விவசாயம் பாக்குதே!
வயலும் வரப்பும் மாறுதே!
மாடிவீடும் ஹோடேலும்
பெருகுதே!
மைதாவும், கோதுமையும்
தேசிய உணவாகுதே!
சோத்துக்கு கையேந்தி
ஜனம் நிக்குதே!
வாழ்க உங்கள்
உலகமயமாக்கல்
வைக்கப்படப்புக்கு
வெச்ச தீ
சிறுசா புடிச்சா என்ன?
பெருசா புடிச்சா என்ன?