மனைவி கை சமையல்

உன் சமையலில் ............
உப்பு குறைவு - ஆனால்
உழைப்பு நிறைவு
காரம் கம்மி - கரைத்த
கனிவோ தூக்கல்
புளிப்பு இல்லை - உன்டபின்
களிப்பு கொள்ளை
எண்னைய் சிறிது – ஆரோக்கிய
என்னம் பெறிது
உன் சமையல் வாசம் - அது
உண்மையிலே நேசம்
அதிகம் நீ பறிமாறுவது - உன்
அன்பை தான்
ஆதலால்
உன் சமையல் – அது
உறவின் மையல்

எழுதியவர் : வி,வி,குமார் (10-Jun-12, 12:50 pm)
பார்வை : 789

மேலே