பதுமையவள்
மான் போன்றவள் இந்த
பதுமையவள் பார்வையிலே
மருளுதல் உண்டோ?
மீன் விழி போன்றவள் இந்த
பதுமையவள் பார்வையிலே
மீனின் நிறம் உண்டோ?
தேன் மொழி என்றால் அவள்
பேசும் மொழியிலே உண்டோ?
வில் பிறை நெற்றியவள்
பதுமையழகு முகம் பார்வையிலே
குறைவு உண்டோ உலகில்?