ஒப்பில்லா உழவு ( கவிதை திருவிழா )

ஊருக்காக உழைத்த உழவனே ...
மண்ணிற்காக முளைத்த மனிதனே ...
விதை விதைத்து பயிர் வளர்த்த
எங்கள் கிராமத்து விருட்சமே ...
ஏழையாகவே வாழும் செல்வந்தனே ..
பணக்காரர்கள் வாழ பயிர் வளர்த்தவனே ..
உலகம் வாழ உயிர் வளர்த்தவனே ...
மழைவேண்டி மண்ணில் கண்ணீர் சிந்தியவனே ..
விளைச்சல் பெருக வியர்வையில் உழைத்தவனே ..
அல்லும்பகலும் பாடுபட்டு அடிமாடாய் போனவனே
ஊன்உறக்கமில்லாமல் உருக்குலைந்து வாழ்பவனே ...
கிராமத்து தங்கமே ...வயல்வெளி சிங்கமே ...
கதிர்றாய் மின்னும் வைரமே ...
உன்னை நம்பியே வாழுது இந்த உலகமே ...
கதிரவனும் உனைகண்டே விழிக்குது தினமே ..
வாழ்வில் உனக்கேது விடுமுறை தினமே ..
வானம் பார்த்த பூமியாய் வாடுது உன் மனமே ..
வருணன் அழுதால் போதும் சிரிக்கும் உன் இனமே ..
உலகம் உனைப்போற்றும் நிலை ஒருநாள் வருமே ..
உழவன் பாதம் பின்பற்றி நடக்கும் உலகம் அக்கணமே ...
ஒப்பில்லா உழவனே ...உலகத்தின் தலைவனே ..
மாசட்ட்ற மனிதனே ..மருவில்லா குலமே ..
வாழ்க வாழ்கவே ..வாழிய உன் வருங்கால இனமே

எழுதியவர் : கவிதை சுனாமி (13-Jun-12, 11:20 am)
பார்வை : 220

புதிய படைப்புகள்

மேலே