என் இனம் அழியாதோ
மலருக்குள் என்ன மௌனமோ என் மீது திரும்பாதோ அதன் கவனமோ,
என் விழியை உன் இமை மூடும் அதயே என்றும் என் விழி தேடும்,
என் மீது நீ கொண்டால் சினம் பெண்ணே
அழியாதா? என் இனம்,
இதழோடு இடம் மாறிய முத்தங்களே இன்றும் என்
இதய சத்தங்களை சீர்ப் படுத்துகிறது,
ஊடல் வந்த்து இடையிலே ,கூடல் வேண்டியே நான் காதலின் குடையிலே,
ஒரு பிழை அதற்கு ஏன் பெண்ணே நம் முன்னே பிரிவின் மழை,
உடையா உறவென்று என்னுள்ளம் பறந்திருந்தது
இறந்திடும் நிலையில் இன்றது பெண்ணே,
மீண்டும் ஒரு முறை நம் காதலை ஈன்றிட வேண்டி மன்றாடினேன் அன்பே.