பையன் வாறானாம் கொள்ளி வைக்க
ஊர் பார்த்து பல நாளாம் உடன் இருந்து நெடு நாளாம்
Skype ல call எடுத்து சலிக்காமல் பேசி விட சந்ததிகள் சலிக்காதாம்
சுளை சுளையாய் பணமனுப்பி சொந்த ஊரை மறந்து
உழைத்து உழைத்து உருக்குலைந்து ஊர் திரும்ப விரும்பாதாம்
எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்குப் போல்
ஸ்கூட்டிப்பெப் வேணுமாம் சுப்பம்மா பொண்ணுக்கும்
அடம் பிடித்த பிடியிலேயே வாங்கிவிட்டாள் அஞ்ஜு நாளில்
அண்ணன் வெளி நாட்டில் அந்தமாரி உழைக்கிறானாம்
லப்டொப் வேணுமென்டு மூணுகாலில் நின்ற முன்வீட்டு முகிலாக்கும்
மூணு நாளில் கிடைத்து விட்ட முழு மடிக்கணணி
Facebook இல் கணக்குண்டாம், பெரிய விசயமெல்லாம் பெயர்த்தெடுத்து விட்டாளாம்
அப்பன் தோட்டம் கொத்த, அம்மா சட்டிகழுவ, பிள்ளை வயிறு கழுவுறாளாம்
Facebook இல் வந்த காதல் கரு கொடுத்து போனதாம்
ஐயோ அவலமென்று அம்மா கதறியழ, அப்பன் மாரடைப்பால் மண்டையைப் போட்டானாம்
எட்டு நாளாகிப் போச்சு என்பாம் பண்ணி
பத்தாம் நாள் பாரிசில் இருந்து பையன் வாறானாம் - கொள்ளி வைக்க