சாரல்...

கொட்டும் மழை அற்புதமும்
குளிர் தென்றல் பூங்காற்றும்
கட்டுக்கடங்க இன்பத்தில்-நம்மை
களிப்பூட்டச் செய்கிறது..

மந்திகள் மகிழ்வோடு பல
மரம் விட்டு மரம் தாவ-அதை
சிந்து கவி பாடினாலும்
சித்த மெனக் கடங்காது...

சாரலோ டினைந்த மழையும்
கணிச் சாரோ டிணைந்த மனமும்
கூடமலை கொண்ட எங்கள்
குற்றாலம் காண வாரீர் ...

குற்றாலத் துறை கண்டு
குளித்தா னந்தமோடு -பின்
குற்றாலக் கூத்தனிடம்-கை
கூப்பி வேண்டிநின்றால்

உற்றாரும் சுற்றாரும்- உறவு
உனக்கு நன்மை பலப் படுமே
கற்றாரும் நற்றாரும்
குற்றால சாரல் காணீர்....
குற்றால சாரல் காணீர்....

எழுதியவர் : பசுவைஉமா (15-Jun-12, 12:42 am)
பார்வை : 201

மேலே