சின்ன ஏக்கம்!
வாழ்கையில் சில உணர்வுகள் அழகானது
பூமியில் கால்பதித்த போது தோன்றிய
முதல் அழுகை
அம்மாவின் முத்தத்தில் திளைத்து போகும்
முதல் சிரிப்பு..
மடியில் தவழும் போது
முகத்தில் தெறிக்கும் என்னவளின் திகைப்பு...
அம்மா!
அவ்வபோது என்னை பார்த்து பார்த்து ரசிக்கிறாள்
ஏனோ அவளுக்கு மட்டும் தெரியவில்லை
என் நிறம்!
அழகென்று இந்த பூமியில் வர்ணித்த வார்தைகள் அனைத்தும் பொய்தான்...
உன் அன்பில் நான் இருக்கும் வரை..!
ஜென்மங்கள் ஏழு இருந்தாலும்
அத்தனையிலும்
நான் மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும்
உன் மகளாகவே...!