.நகைப்பதில்லை நாம் நகையின்றி
இலக்கியங்களில் மட்டுமே வீரம் செறிந்ததோ
என் இனம் என ஏளனம் தோன்றுகிறது,
ஏழு கோடியாம் மொத்த மக்கள் தொகை
ஆனால் மக்கள் அனைவரும் இன்னும் வாழ்வதோ குகை,
நகைப்பு என்பதையே மறந்த அங்கே வாழும் என் இனம்,
இங்கே அதே இனம் நகைகளின்றி நகைப்பதில்லை என கூறுகிறது,
என்ன ஒரு மாறுதல் சில மைல்களுக்கிடையில்.
இன்னும் எழாவிட்டால் பழி வந்து சேரும் தோழர்களே,
விழி திறந்து பாரீர் வழி பிறக்க வாரீர்.