தோழர் அருண் குமாரின் "இறைவா இந்தப் பூமியைப் புதைத்துவிடு ...!?" என்ற படைப்பிற்கு , பிரேம் குமாரின் கருத்து

எழுத்துத் தோழர்/தோழிகளுக்கு என் வணக்கங்கள்.

பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு.அருண் குமார் அவர்களின் "இறைவா இந்தப் பூமியைப் புதைத்துவிடு ...!? " என்ற படைப்பை படித்தேன்.

அவர் படைப்பில் எழுதியிருந்த, நடந்த சம்பவங்களைக் கண்டால் எனக்கும் கோபம் வருகிறது. மனம் வெடிக்கிறது. இது இயற்க்கை.

தனிப்பட்ட மனிதர் (அ) மனிதரை சார்ந்தவரையோ குறிப்பிடாது....கீழ் உள்ளதை படித்து கருத்து பரிமாற்றம் செய்வோம், எது சரியென. ஏனெனில், எனக்கும் அடுத்த கட்டம், அடுத்த கட்டம்,....யென யோசித்ததில் குழப்பமே.

கவிஞன் - மனிதரில் உள்ள ஒரு புனிதன், உண்மையில் சில காலநேரங்களில் மட்டுமே வாழ்வதற்கு இயற்க்கை விதி செய்தது.

கவிஞனின் மனதில் வெடித்துச் சிதறிய வார்த்தைகளையடுத்து, அடுத்தகட்ட வேலையாக

இனி...
உடைப்பேன் உலகை....
இதில் முதல்மரணம்,
உன் கையில் உன் குழந்தைச் சடலமென
ஒவ்வொருவரின் (சிலருக்கு) கையில்விழுந்தால்.....

வாய்த் தைரிய வீச்சு...
மனத் தைரிய முண்டோ....?
ஒருமுறை நினைத்துவிட்டு கூறும்....
இறுதி ஓலம் இடைவிடாது கேட்க்கும்
இதய முண்டோ....

அடுத்தும் பழிப்பாய்
அதை நானறிவேன்.....

இது மனிதப்பிறவி......
செய்ததவறுகளில்,
ஏதோவொன்றையோ,
இல்லை பலதையோ
இதயத்தில் இருப்பவருக்கே உரைக்காது
உண்மையாக இராது
மறைத்துவாழும் அற்பமனம் படைத்த
மானிடப்பிறவி.....

முதலில், பரிசுத்தமாக, உண்மையாக, துளிகூட இதயத்தில் இருப்பவருக்கும், அடுத்தவருக்கும் தீங்குசெய்யாது, ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினங்களை அழிக்காது வாழும் உயிர்களுக்கே என்னிடம் பேச அனுமதியுண்டு என இறைவன் கூறிவிட்டால்.....

அதுவரை,
நடப்பதை பார்ப்பதுதான் உன்னைப்போன்ற
உயிரினங்களுக்கு பாடம்;
என இறைவன் உரைத்துவிட்டால்.......
(May be, In that case, Just you have to live, as like now)

நீ சந்தோஷமாக வாழவேண்டும்,
உன் வீட்டிலுள்ள ஒருவரும் எவ்வித ஊனமுமின்றி சந்தோஷமாக வாழவேண்டும்,
அனைத்து செல்வங்களும் பெற்று தன் குழந்தைகள் அனைவரும் சந்தோஷமாக வாழவேண்டும்........
என மேலும் பல, சுயநலத்துடன் கூறி பிரார்த்திக்கிறாய் என்னை. "வெட்கமாக இல்லை,.....".

என்றாவது,
நான் உண்மையாக வாழவேண்டும்
நான் நேர்மையாக வாழவேண்டும்
மக்களுக்கும், உயிரினங்களுக்கும் நன்மைபயக்கும்
நற்ப்பணிகளுக்காகமட்டும் நான் வாழவேண்டும்
நான் அனைத்து உயிரினத்திடம் அன்பு செலுத்த வேண்டும்
எந்த ஒரு உயிரினத்திற்கும் மறந்தும் தீங்கு செய்துவிடக்கூடாது
மக்களை, நான் மற்றும் எனைச் சார்ந்தவர் ஏய்த்துப் பிழைக்கக்கூடாது
என் மனதில் ஆசை துளியளவுகூட வேர்விடக்கூடாது
என் குழந்தை, என் குடும்பம் எனஇல்லாது, யாரவும் ஒருவரே என்ற எண்ணம் வரவேண்டும்
---இவ்வாறு என்றாவது என்னிடம் பிரார்த்தித்திருக்கிறாயா????? "என்று இச்சொல் அனைவரிடத்திலும் கேட்பேனோ, அன்றுதான் நல்லுலகம் பிறக்கும்". அதுவரை, ஒவ்வொருவராக நல்முயற்சிகள் செய்தே ஆகவேண்டும். விழுந்து, எழுந்து, விழுந்து, எழுந்துயென..... உழைக்காம... சும்மாவா கிடைக்கும் சுதந்திரம்.

உலகில் நடக்கும்,
ஒவ்வொரு அசையும், அசையா நிகழ்வுகளை பார்த்து, நடத்தும் எனக்கே அறிவுரையா என இறைவன் கூறிவிட்டால்.....

உதாரணம்,
World War II - ஆசையால்தானே ஆரம்பித்தது......
இன்றும், பிறக்கும் ஒவ்வொரு மனிதனும்,
மக்களிடத்து அன்புசெலுத்தவே பிறந்தோம் என்று நினைக்கிறார்களா, இல்லவே இல்லை
மோகம், காமம், கோபம், சுயநலம், மேலும் கர்மபலன் இவையாவும் மனிதனின் தலைமேலேறி தாண்டவமாடுகிறது...
உடைக்கவேண்டுமானால் இவைகளை உடைக்கவேண்டும்
உலகையல்ல......

இவைகளை உடைத்தால், உலகம் சரியாகிவிடும்.

எழுதியவர் : A பிரேம் குமார் (24-Jun-12, 2:10 pm)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 509

மேலே