நன்றிகள் - எழுத்துலக குடும்பத்திற்கு

அன்பு தோழர் தோழிகளே,
வணக்கம்!

"யாவும் நீ அறிவாயடி தோழி" என்கிற என் கவிதைக்கு பரிசு கிடைத்தமைக்கு நான் முதலில் எழுத்து இணையத்தள நிர்வாகத்திற்கு நன்றியை செலுத்துகிறேன். நான் கண்ட தமிழ் இணைய தளத்தில் என்னை மிகவும் கவர்ந்த தளம் இது, மிகுந்த தமிழ் அற்பணிப்போடு சிறப்பான செயல்பாடுகளுடன் அனைவரும் பாரட்டும் வகையில் செயல்படுகிறது. அந்த புகழும் பாராட்டும் எழுத்து தள நிர்வாகிக்கே சாரும்! தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் இந்த இணையத்தின் சிறப்பான செயலை நினைவில் வைக்கும்.

நான் மலையாளத்தை தாய் மொழியாக கொண்டவள், எனக்கு தமிழின் மீதே பற்றும் நாட்டமும் அதிகம், என்னுடைய சுயமுயற்சியால் என்னால் முடிந்ததை தமிழில் எழுதுகிறேன், தமிழை நான் பள்ளியில் மட்டுமே படமாக பயின்றேன், கல்லூரியில் கூட தொடரவில்லை, இருந்தும் தமிழ் மொழியை நான் விட வில்லை, தமிழ் மகளின் புதல்வியாக இருக்கவே ஆசைபடுகிறேன், நான் தமிழில் வல்லமை பெற்றவள் இல்லை, தமிழ் பயிலும் மாணவியாக இருக்கிறேன். என்னுடைய தாய் தமிழுக்கு நன்றிகள் பல..

என்னுடைய அன்பான அம்மாவிற்கும் என் குடும்பத்திற்கும் நன்றிகள் பல, எனக்கு சிறப்பான அறிவை புகட்டி நல்வாழ்கை தந்தவள் அவள்! என் அன்பு கணவர் பாரூக் அவர்களின் ஊக்குவிப்பே நான் கவிதை எழுத காரணம் அவருக்கும் நன்றிகள் பல, என் அன்பு தோழி திருப்பத்தூர் சரோ என்னை கவிதை எழுத ஊக்குவித்தவள் அவளுக்கும் நன்றிகள் பல..

என்னுடைய எழுத்துலக தோழர் தோழிகள் அனைவருக்கும் நன்றிகள், நீங்கள் எனக்கு ஆசிரியர்கள், அவ்வபோது எனக்கு அறிவுரை கூறி விமர்சித்து என் செயல்களை ஊக்குவித்தவர்கள். குறிப்பாக என் அன்பு தோழி லலிதாவிற்கு நன்றிகள் பல, அவளின் நட்புக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றிகள்.

ஒரே ஒரு வேண்டுகோள் எழுத்து நிர்வாகத்திற்கு,
தேர்வு முறையை மட்டும் கொஞ்சம் வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பது. இந்த அடிப்படையில் கவிதை தேர்வு செய்ய படுகிறது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள ஆசைபடுகிறோம்.

என்னை போன்று கவிதை எழுத பயிலும் அணைத்து எழுத்துலக நண்பர்கள் முயற்சியை கைவிடமால் எழுதுங்கள்!

அனைவரும் எழுதுவோம்! தமிழுக்கு நம்மால் முடிந்த தொண்டு செய்வோம்! எழுத்து இணையதளத்திற்கு ஆதரவு தருவோம்!

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (23-Jun-12, 2:24 pm)
பார்வை : 506

மேலே