கோவில்

தாய் தமிழ் மறைந்து போன
நினைவிடம்

சேய் தமிழன் சேர்ந்து
சமத்துவத்துக்கு
கட்டிய கல்லறை

அதனால் அதை
பாதுகாக்கத்தான்
பார்ப்பான்

சமூகம் கல்லறை கட்ட
துடிக்கும் காதலுக்கும்
காதலர்க்கும்
அது தான்
கடற்கரை
தமிழில் பீச்

காஞ்சி
தேவனாதன்களின்
கர்ப்ப விடுதி
தமிழில் லாட்சு

சங்கர் ராமன்களுக்கு கொலை பீடம்
அய்யமென்பர்
காஞ்சியில் சின்னவர்
பெரியவரை நல்லா விசாரி

அன்றைய அந்தபுரம் கசந்த
அரசர்களின் கொலு மண்டபம்
தாசிகள் அழும் மண்டலம்

சில காவி காமன்டலங்களின்
சல்லாப குடில்

பூசாரிகளுக்கு
தட்டு படும் புகலிடம்.

வணங்க போகும் பக்தர்களுக்கு
சில வேளை வதை முகாம்

பகவானுக்கும் பள்ளியறை
நல்லவருக்கு பாவத்தை சொல்லி
கொடுத்த
பள்ளிகூடம்

அங்கே நித்யாக்கள் ஆனந்தமாய்
ரஞ்சித்து .... ஆடும்
விளையாட்டு திடல்

அவனும் அவன் பக்தனும்
தலைகவிழாமல்
இன்னும் வரும்
வளம் கெட்டபாதை!
கிரிவட்டஉபாதை!

கோபம் கொள்ளும் பக்தா!
கோபத்தை கொல்!

அமைதியாய் இரு
மெதுவாக யோசி
குறைகளை களை !
புனிதத்தை காப்பாற்று
வலி எனக்கும் தான்

பக்தி
ஒழுக்கமாய்
மாறும் போது
நானும்
ஒழுக்கத்தின் பக்தன்

எழுதியவர் : (27-Jun-12, 2:56 am)
சேர்த்தது : thamileelan
பார்வை : 148

மேலே