சமூக அவலங்கள்

எழுதி எழுதி நீர்த்துப் போனது என் பேனா மை..

தாய்ப்பால் தவிர்த்து கள்ளிப்பால் அருந்தி
பசியாறுவதாய் எண்ணி உயிர் தொலைத்து
தாய்முகம் அறியும் முன்னே தவித்து சாகிறது
பெண் சிசு..

பத்து திங்கள் சுமந்தால் என்ன
மூவெட்டு வருடம் வளர்த்தால் என்ன
சுமையாகிப்போனாய் என்று பெற்றோர் உதறும் பிள்ளை..

இன்று புத்தன் இருந்தால் கேட்டிருப்பேன்
அன்பு செய்ய போதித்தாய்.
இன்று அன்பை அன்பு செய்ய நீ மட்டுமாவது
இருந்திருக்கலாமே என்று..

எழுதியவர் : ShakthiG (27-Jun-12, 12:18 pm)
பார்வை : 204

மேலே