ஊன்று கோல்

முதிர்ந்த வயதில்
முளைக்கிற
இன்னொரு கால்

தளர்ந்த தேகம்
தள்ளாடும் போது
தடுமாற்றம் களையும்
தடி நிவாரணி

இதன் நட்பால்
நகர்கிறார்கள்
இடம் விட்டு இடம்
முதியவர்கள்

இதன் பிடியில்
நிமிர்ந்து நடந்த
உயர்ந்த மனிதர்களும்
பணிவு என்பதை
பறைசாற்றுகிறார்கள்

கைவிட்ட கால்களை
கரம் தொட்டு இயக்கும்
இன்னொரு கால்
ஊன்று கோல்

எழுதியவர் : அலாவுதீன் (27-Jun-12, 2:33 pm)
பார்வை : 190

மேலே