சூழ்நிலை கைதிகள்

விழிகளால் விலங்கிட்டு,
இதயத்தின் சிறையில்
அடைத்து வைத்தோம்,
எண்ணங்களையும்,
ஆசைகளையும்,
மீட்ப்போர் யாவர் உளர்.
இருப்பினும்,
தண்டனை தான் யாது?
மறப்பதும் விளக்குவதுமா?
முடியாதென்றால்,
முடிவில் மரண தண்டனையா?
பிறரின் வளர்ச்சி கண்டு
பெருமை பேசுவோரே?
உங்களில் ஒருவர் உளர்
என்றால்,
தடை எதற்கு?
வாய்ப்புகள் தந்தால் தான்
தனித்தன்மை காட்டிட இயலும்.
தழும்புகள் நாடி முயற்சி என்னும்
முத்தெடுக்க நாங்கள் முனைந்து விட்டோம்
லட்சிய வாழ்க்கையில் சூழ்நிலை கைதிகளான
சாதனையாளர்களுக்கு,
வாகை சூடுவிரோ?
தன்னம்பிக்கை என்னும் மலர்தொடுத்து?

எழுதியவர் : நிஷா (29-Jun-12, 4:36 pm)
பார்வை : 217

மேலே