தமிழை நேசி
தமிழனே
நீ நிறைய படி
நன்றாய் முன்னேறு
அறிவியல் தொழில் நுட்பம்
உன் மதிநுட்பத்தால்
மலர்ந்து மணம் பரப்பட்டும்.
உலகை வலம்வர
தமிழ் மட்டும் போதாது
ஆங்கிலம் அவசியம்
அதற்காக தமிழை
அன்னியப்படுத்தாதே
அனாவசியமாக்காதே ..
ஆங்கிலத்தின் அவசியத்தை
நீ உணர்ந்திருக்கிறாய்
உயர்ந்து நிற்கிறாய் ..
தமிழன் உயர்வு
தமிழின் உயர்வு
பூரிக்கின்றோம் ....
ஆனால் நீ
திக்கிப் ;பேசும் தமிழால்
தமிழ் தினம் தினம்
செத்துப் பிழைக்கிறது ...
தமிழில் எழுதச் சொன்னால்
துணைக்காலை எங்கு போட என்று
துணைக்கு ஆளை தேடுகிறாயே..
அந்நிய மண்ணில்
வசிக்கின்ற நண்பனே
தமிழில் வசிப்பதை எப்படி மறந்தாய் ?
வசிப்பிடம் வேறு என்பதாலா ?
நீயே இப்படி என்றால்
உன் சந்ததி எப்படி ?
நான் தமிழன்
எனச் சொல்லும் பெருமை
உன்னிடம் குறையவில்லை
தமிழின் இனிமை குறைந்திருக்கிறது
தமிழ் கலாசாரம் குறைந்திருக்கிறது
தமிழுக்கு அமுது என்று பேர்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
கவிஞரின் வார்த்தைகள் கற்பனையல்ல
உணர்ந்து உதித்த உண்மை
உணர்ந்தால் உனக்கு பெருமை
பரவும் தமிழின் இனிமை
நீ பாவலர் ஆக வேண்டாம்
தமிழ் ஆர்வலராய் இரு
உன் சந்ததிக்கு
தமிழ் காவலனாய் இரு,...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
