சமூக அவலங்கள் - கவிதை திருவிழா
நகர பேருந்தினுள்
நாலு பேர் காலடியில்
சிதறி கிடக்கும்
அங்காடி அரிசியை
தன கரங்களால் கூட்டி அள்ளும்
காவி உடை அணிந்த முதியவர்
எழுதுகோல் பிடிக்க வேண்டிய
பிஞ்சு கைகளில் உடுக்கை கொடுத்து
அடிக்க செய்து தானும் சவுக்கால் அடித்துக்கொண்டு ஆடும் கூத்தாடி
பூஜை அறையில் இருக்கும் கடவுள்
வீதிகளில் வண்ண ஓவியமாக
பல பேர் போட்டு சென்ற
நாணயங்களின் பின்னணியில்
வீதிக்கு வீதி மதுக்கடை
அரைகுறை ஆடையோடு
தெருவோரங்களில் மயங்கி பல
குடிமன்னர்கள்
இது போன்ற
குடிமன்னர்களால்
இளம்விதவை பட்டம் சுமக்கும்
பல சுந்தரிகள்
கலாச்சார சீரழிவு
முகம் சுழிக்க வைக்கும்
ஆபாச சுவரொட்டிகள்
அசிங்கமான விளம்பரங்கள்
அவற்றை அக்கறையோடு கிழித்து
உணவாக்கி கொள்ளும் சாலையோர
மாடுகள்
நட்பு என்ற பெயரில் அரங்கேறும்
பல நாடகங்கள்
பழகுதல் என்று கூறி
திரை அரங்குகளிலும்
கடற்கரைகளிலும் சுற்றி திரியும்
சில பட்டாம்பூச்சிகள்
பணத்திற்காக எதையும் விற்கும்
எதையும் செய்யும் மனிதர்கள்
மனிதம் மறந்து மனம் மாறி போகும்
மானுடங்கள்
சுயநலமே அதிகமாய் ஆள்கிறது
பல முதியோர் இல்லமே இதை
பறைசாற்றுகிறது
உறவினர்களால்
தொலைத்து விடப்பட்ட
சித்தம் கலங்கி
தன் நிலை மறந்து திரியும்
பெண்களை கூட விட்டு வைக்காத
விஷங்கள்...
நூறாண்டு காலம் கூட
வாழ வழியில்லாத மனிதன்
வாழும்போதே பல உயிர்களை
வாட்டி வதைக்கிறான்
கடைசியில் வாடி திரிகிறான்...
PRIYA