கண்ணோடு இயைந்த கண்ணீர்....!
அறிமுகம் அறிந்து,
அன்பில் அணைந்து,
அழகாய் வளர்வது நேசம்.
காதல் தொடங்கி,
காமம் முடிவில்,
கனத்து நிறப்பது பாசம்.
விழியில் விழுந்து,
இதயம் வழிந்து,
உயிரில் உறைவது காதல்.
உடல் தொடங்கி,
உயிர் முடிவில்,
எஞ்சிய உணர்வு...இனிமையே!
கனமாய் நிறைந்த
காதல் மனத்தின்
கற்கண்டின் சுவையே...
உடற்கூற்றின் ஐம்புலன்களும்
இன்பத்தில் அடங்கும் போது...
கடைசிக் கண்ணீர் கனக்கும்.!
கவிதையின் வரிகள்
கனத்தது.!
கண்ணோடு இயைந்த
கண்ணீர்....!
-கவிஞர். கவின்முருகு..