"பாடை"

பாடை

ஒரு பள்ளி கூடம்;

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளும்
சுள்ளிதோட்டம் சுமந்து செல்லும்
சமத்துவ சுமைதாங்கி;

நாறிய கட்டை நறுமணம் பூசி
பஞ்ச்சனைக்கு அனுப்பபடும்
வாழ்க்கை தொகுப்பின்
மாதிரி கோப்பு;

நரன் எரியும் நாட்டுக்கு
தினம் பயணியை ஏற்றிபோகும்
எட்டுகால் நான்குபுடி வண்டி

கூடுவிட்டு உயிர்
கூற்றுவன் கொண்டு போனபின்
தூற்றுவோர் தூற்ற
போற்றுவோர் போற்ற
நாறியதை வாரிபோடும்
சமத்துவ சகிப்புத்தன்மை
சமுக சேவகன்

இதில் பேதமில்லை

எல்லார் கதையிலையும்
இறவன் எழுதிய முடிவுக்கு
கடைசிவரை வரும் கதாபாத்திரம்;

போய் சேர்ந்தவனுக்கு
போக போகிறவர்கள் கட்டிய
குட்டி குச்சி குடிசை;

வாழ்க்கை
நிரந்தரமில்லை என
சவம் சுமந்து
சாட்ட்சி சொல்லவந்த
அரு உருவான ஆண்டவனின்
ஆத்மகுரல்....;

பேதமில்லாமல் பிணம் துக்கி
மனித சமத்துவத்தை
தன்னில் பிரதிபலிக்கும்

இந்த பாடை

பேதம் நிறைந்த வாழ்க்கையில்
பேதம் சொல்ல
போதிமரம்
இதை உணர்ந்தால் உனக்கும்
ஞானம் வரும்;

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (30-Jun-12, 2:20 pm)
பார்வை : 256

மேலே