இறைவனின் சிதறிய தவறுகள்
தொலை தூர
பயண வேளையில்
சில நேரங்களில்,
நம் விழிகளை ஈரமாக்கும் காட்சிகள்
அதோ,
உடுத்த உடையின்றி
உண்ண உணவின்றி
கேட்போர் யாரும் இல்லாமல்
பசிக்காக அடுத்தவரிடத்தே
கைவிறிக்கும் பட்சிளம் சிறார்கள்
அநாதை என்னும் பெயருடையோர்.
விடுதிகள் அதிகமாகி
எண்ணற்றோர் பாரபட்சம் பார்க்க
இச்சமுதாயம் முன்னே
வளைந்ததோர் வினாக்குறியாய்?
நடைபோடும் மான்படையினர்.
இவர்கள் விதியின் பாதையில்
உபயம் தேடும் விநோத வாதிகள்.
ஆனால்,
இவர்கள் இறைவனால் சிதறப்பட்ட
செந்நீர் தவறுகள்.
மாண்புமிகு சமுதாயமே
அவர்களையும் ஒரு பொருட்டாய் கருதி
உங்களிடத்தே மனித நேயம் என்னும் மாண்பினை
பகிர்ந்து கொள்வீர்களாக
அவர்களிடத்தும்.