கவிதைத் திருவிழா..ஒரு தன்னிலை விளக்கம்.!-பொள்ளாச்சி அபி.

அன்புள்ள நண்பர்களே எழுத்துலகப் படைப்பாளிகளே.
உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
இக் கவிதைத்திரு விழாவில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் இதனை முன்னின்று செயற்ப்படுத்திய தோழர் நிலா சூரியன் மற்றும் நடுவர்களாக பங்கேற்று சிறப்பான வகையில் ஒத்துழைப்பு தந்த அருமையான தோழர்கள் திரு காளியப்பன் எசேக்கியல் திரு மருத்துவர் கன்னியப்பன்,திரு பொற்ச்செழியன் ,திரு சங்கரன் அய்யா,திரு மு.ராமச்சந்திரன் தோழியர் ப்ரியாராம்,தோழியர் நா.வளர்மதி,தோழர் முத்துநாடன் திரு ஈஸ்வர் தனிக்காட்டு ராஜா, குறிப்பாக திரு பரிதி முத்துராசன் ஆகியோருக்கு எனது சார்பில் வாழ்த்துக்களும் நன்றியும்.!
இது தவிர இப்போது உங்களுடன் நான் பேச விரும்பியது ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கவே.
நேரம் இருப்பவர்கள் படிக்கலாம்.பிறகு என்னை நிச்சயம் மன்னிக்கலாம்.மன்னிக்கத்தான் வேண்டும்.

எழுத்து தளத்தில் தோழர் நிலா சூரியனால் துவங்கப்பட்டு,தொடரப்பட்ட கவிதைத் திருவிழாப் போட்டியில்,நானும்,மற்ற தோழர்களுடன் விருப்பமுடன் இணைந்து பணியாற்றிட ஒத்துக் கொண்டேன்.
அதனால் கடந்த ஆறாம் தேதியிலிருந்து இந்த தளத்தைவிட்டு சற்று விலகி நிற்க வேண்டியதாய்ப் போயிற்று.!

காரணம்,இந்தத் தளத்தில் தங்கள் படைப்புகளைப் பதிவு செய்யும் நிறைய நண்பர்கள்,அதன்மீதான எனது கருத்தையும் மிக உரிமையுடன் தனிவிடுகையில் கேட்பது வழக்கமே.அதில் தவறொன்றும் இல்லை.கருத்துப்பரிமாற்றம்தான்.
ஆனால் நடுவர் குழுவில் நானும் ஏதோ என்னாலான பணியை ஏற்றுக் கொண்டதால்,நண்பர்களின் கவிதைகளுக்கு என்னால் அப்போது கருத்து விமர்சனம் என எதுவும் பதியவில்லை.மேலும் அது போட்டியின் இறுதி முடிவை எவ்விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதாலேயே கருத்துக்கள் பதியவில்லை.
தொடர்ந்து நான் எழுத்துதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்போது எந்தவொரு கருத்தும் பதியப்படாமல் இருந்தால் என்னைப் பற்றி தவறாக நினைக்கக்கூடும் என்பதாலும் நான் அதனை விட்டு ஏறக்குறைய ஒரு மாதம் விலகியே இருந்தேன்.அதன் காரணமாகவே தனிவிடுகையில் வந்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு நான் பதில்கூட எழுதவில்லை.அவ்வாறு பதில் கிட்டாத நண்பர்கள் என்னைக் குறித்து தவறாக ஏதும் நினைத்துவிடக்கூடாது என்பதாலேயே இந்தத் தன்னிலை விளக்கம்.
நண்பர்களே அதனால் என்னை மன்னித்துவிடுங்கள்.! இனி எப்போதும்போல தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.! என்ன சரிதானே..!
இதனையும் கண்டுகொள்ளாமல் இருந்து,இன்னும் நீங்கள் கோபத்தோடு இருக்கிறீர்கள் என்று என்னை எண்ணவைத்து விடாதீர்கள்..! -அப்படியானால் இரவில் கனவில் வந்து தொல்லை கொடுத்துவிடுவேன்.-

எழுதியவர் : பொள்ளாச்சி அபி b +ve (4-Jul-12, 2:25 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 231

சிறந்த கவிதைகள்

மேலே