அந்த ஒரு பதில் நான்தான்

தேவை தீர்க்கும் தென்றல் நீ தான்
தேடி அலைகின்றேன்........

கவிதை எழுத ஆசை இல்லை
மனதை சொல்கின்றேன் .........

வார்த்தை எல்லாம் மௌனம் கொண்டு
பேச மறுக்கிறதே ........

சுவாசம் எல்லாம் நுழையும் பாதையில்
அடிபட்டு திரும்பியதே ........

ஆசை எல்லாம் அடிகோல் இட்டு என்
அழிவை சொல்கிறது .............

கடவுள் என்பது பொய்யா ? மெய்யா ?
காதலும் கடவுளின் நிலையா?

உறக்கம் இரக்கம் இல்லாத நிலையில்
தேடி அலையும் மனிதனின் விதியா ?

கேள்வி இல்லை பதில் மட்டும் உண்டு
இருக்கும் இல்லை இரண்டுக்கும் இடையில்

சிக்கி தவிக்கும் அந்த ஒரு பதில் நான்தான்

இருக்கும் என்றால் இருக்கும்
இல்லை என்றால் இல்லை

எழுதியவர் : கவிஞர் : ஜெ .மகேஷ் (5-Jul-12, 10:18 am)
சேர்த்தது : jgmagesh
பார்வை : 205

மேலே