அவள் இறப்பின் கடைசி ஊர்வலம்

உயிரோடு
இருக்கையில்
குரலினை கேட்கவே
ஏங்கித்தவித்த தாயின்
குமறல்களை உணராத
ஈனப்பிறவிகள்
அவள் இறப்பின்
கடைசி ஊர்வலத்தில்
பெருமைக்காய்
சிறப்பெடுத்துக்கொண்டிருக்கின்றன
தாய்மையின் உள்ளத்தை
ஒருமுறை பரவசப்படுத்த
இயலாத கோழைகள்
வாழ்தலில் மேல் மடிதல்..!!