கல்லூரி வாழ்க்கை
முகம் தெரியாத நபர்களை சந்திப்பாய்
உன் முதல் நாளில்!
உன் முழு மனதை அறிய அடியெடுத்து
வைப்பாய் உன் முதல் ஆண்டில்!
விண்மீன்கள் விளையாடும் இருளில்லா
வானம் கல்லூரி என்பதை அறிவாய்!
இங்கு முதலில் உன் கண்கள் தேடுவது
காதல் இல்லை என்பதை உணர்வாய்!
கருவறையில் இருந்து வெளிவந்து
உன் தாயை காண்பாய் முதலில்!
தான் கல்லறை சென்றபின்னும் நினைக்கும் நட்பை காண்பாய் கல்லூரியில்!
ஆசிரியர் உனக்கு நண்பனாவதும்
இங்கு தான்! உன் ஆசை நிறைவேற்றும் நண்பணை காண்பதும் இங்கு தான்!
தயக்கம் கலந்த மகிழ்ச்சியில்
முடியும் முதல் ஆண்டு!
வேறு கனவுகளுடனே தொடங்கிவிடும்
இரண்டாம் ஆண்டு!
உன் கண்கள் பிறர் கண்களை
பார்க்க தொடங்கிவிடும்!
உன்னை அறியாமல் உன்னுள்
ஒரு காதலும் வந்துவிடும்!
ஆசிரியர் கூறும் அறிவுறை முழுவதும் கேட்பாய்!
வகுப்பறைவிட்டு வந்ததும் உடனே அதை மறப்பாய்!
அலட்சிய போக்கில் மகிழ்ந்தே கழிந்திடும் இரண்டாம் ஆண்டு!
உன் லட்சிய போக்கை தொடங்கி வைத்திடும் மூன்றாம் ஆண்டு!
எதிர்காலத்தின் எதிர்பார்ப்பு
உனக்குள் அதிகமாகிவிடும்!
இறந்தகாலத்தின் தோல்விகள்
அனைத்தும் உனக்கு மருந்தாகிவிடும்!
உன்மேல் உனக்கே இருக்கும்
நம்பிக்கை உயரும்!
உன் பெற்றோர் ஆறுதல் குரல்
என்றும் பின்னே வரும்!
உன் மனதை முழுமையாய் அறிந்திடுவாய்!
ஆசிரியர் அறிவுறை அப்போது உணர்ந்திடுவாய்!
முன்னேற்ற பாதையில் ஏற்றிவிட்டு முடிந்துவிடும் மூன்றாம் ஆண்டு!
உன் முழுத்திறனை வெளிப்படுத்தும் தருணமாய் அமையும் நான்காம் ஆண்டு!
பிரியும் கவலை மனதுக்குள் இருப்பினும்!
இருக்கும் நாட்களை இன்பமாய் வாழ்ந்திடுவாய்!
பட்டம் பெற்று பறந்திடும் வேளையில் பெற்றோர் சிந்திய கண்ணீர் மறைந்துவிடும்!
உள்ளங்கள் பிரிந்திடும் வேளையில் நண்பன் கண்ணீர் நிரம்பியே கல்லூரி மூழ்கிவிடும்!
கண்ணீர் கலந்த ஏக்கத்துடன் எதிர்காலத்தை நோக்கி சென்றிடுவாய்!
இவ்வாழ்க்கை இனிவருமா என்று!