யாதுமாகி நிற்கின்றாய்..

யாதுமாகி நிற்கின்றாய் தோழி
தாயுமாய் தாரமாய்
ஏதுமாய் நீயே
எங்கும் நிறைந்தே

என்னில் எழில் புரிந்தாயே
சாது நான் உன்னிலே
கொண்ட காதலால்
மாது நீ ஆகினாய்

என்னில் பாதியாய்
பாதி பாதி சேர்ந்து ஆன
முழுமதியாக – நம்
காதல் சேர்ந்து ஆகிறதே

சிறு கருவாக
மீதமாகிப் போகும்
நிதம் பொங்கும் பாசமே – அதை
நிவர்த்தி செய்ய வருகிறான்
நம் குட்டி வாசனே

எழுதியவர் : மன்னார் அமுதன் (1-Oct-10, 3:00 pm)
பார்வை : 608

மேலே