காமம் ஒரு புனிதமான உணர்வு !

காதல் இருந்ததோ இல்லையோ ஆனால் நாம் இந்த உலகத்தில் பிறப்பதற்கு காரணம் காமமே என்பதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்...!

அந்தரங்கமாய் வைத்துக்கொள்ளும் மட்டும் காமம் ஒரு அழகான உணர்வு தான்.ஒரு உயிரை அழிக்கும் சக்தி எவ்வளவு தூரம் காதலுக்கு இருகின்றது..ஆனால் ஒரு உயிரை உருவாக்கும் சக்தி காமத்துக்கு தானே இருகின்றது....?

காமம் என்பது வேறு ஆபாசம் என்பது வேறு...
உதாரணதுக்கு..
ஒரு ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீராங்கனையின் பாதங்களைத் தொட்டு முத்தமிட நினைக்கும் மனிதனுக்கும் அவளின் தொடையை அல்லது தொப்புளை பார்த்து கனவிலாவது தொட்டு பார்க்க விரும்புவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருகின்றது தெரியுமா? அவளுக்கு சேலை கட்டி கொண்டு சாதனை படைக்க முடியுமா?

மனிதர்கள் மிருகங்களாக மாறும் போது தான் இந்த விபரீதங்கள் எல்லாம்.காதல் மட்டும் இருந்து உலகம் வளம் பெறாது. காமத்தையும் காதலையும் காதல் செய்ய விடுங்கள்.ஆபாசத்தை அடியோடு அழித்து விடுங்கள் !

காமம் இன்றி காதலோ காதல் இன்றி காமமோ உன்னதம் அடைவதில்லை !

எழுதியவர் : KS Kalai (8-Jul-12, 8:05 pm)
பார்வை : 539

மேலே