விரயங்களை தவிர்ப்போம் !!!
ஒரு சிலர் இன்று வறுமை எனும் சொல்லுக்கு அகராதியில் பொருள் தேடுகிறார்கள்.
நீங்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவாவிட்டாலும் பரவாயில்லை; ஒரு வேலை கஞ்சிக்கு ஊசலாடும் உயிர்கள் வாழும் ஊரில் வாழும் மனித "ஈனங்களே" கொஞ்சம் நினைத்து பாருங்கள் உங்கள் குப்பை தொட்டியை சுத்திகரிக்க வரும் அந்த தொழிலாளியின் கண்களில் தெரிகின்ற வயிற்றெரிச்சலை..
அவன் பொறாமையால் எரியவில்லை; இல்லாமையால் உருகுகிறான் என்பது புரியும்...
உங்கள் சந்தோசங்களை குறைக்க சொல்லி துளி கூட கேட்க மாட்டேன், தயவு செய்து விரயங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்....!!!
உயிருக்கு போராடும் மனிதர்களின் வாழ்கையை ஒரு நிமிடமாவது நீடிக்க உங்களால் முடியுமாய் இருக்கும் !

