சீர்கெடும் சிறுவர்கள் !

கிளாஸ் பீஸ்
ரூம் வாடகை
புத்தக பட்டியல்
சாப்பாட்டு செலவு
போக்குவரத்து செலவு
இப்படி எல்லா செலவுகளையும்
பட்டியல் போட்டு
அம்மாவுக்கு கடிதம் போட்டான்
அன்பு மகன் நகரிலிருந்து....!

அம்மா அதை
அப்பா காதில்
பக்குவமாய் எடுத்துச் சொல்லி
பணம் வரும் வரைக்கும்
பார்த்திருந்தாள் !

கூலிக்கார தந்தை -
தெரிந்தவர்களிடம் கையேந்தி
சேட்டுவிடம் வட்டிக்கு வாங்கி
வீட்டு செலவை கடனாக்கி
தேவையான காசோடு
வேதனையோடு வீடு வந்து
மகனுக்குப் போடச்சொல்லி
மனைவியிடம் கொடுத்தார்...

விடியும் வரை பார்த்திருந்து
கணவனுக்கு காலை ஆகரமாய்
“கஞ்சி” வைத்து கொடுத்துவிட்டு
கடுகதியாய் ஓடி
வைத்திருந்த பணத்தை
வங்கியிலே போட்டுவிட்டாள்
வாஞ்சை மிக்க மகனுக்கு !

ஆசையோடு காத்திருந்த
அன்பு மகன் -
காசு வந்த செய்தி கேட்டு
சந்தோஷ கோசம் போட்டு
பாசம் மிக்க தோழர்களை
பரிவோடு அழைத்துக்கொண்டு
படி ஏறி ஓடி வந்து
பந்தியிலே முந்திக்கொண்டு
பக்குவமாய் ஓடர் கொடுத்தான்...
“அஞ்சு போத்தல் பீர்
சிக்கன் டேவேல் ரெண்டு டிஸ்
சிகரட் ஒரு பாக்கட்”

கஷ்டப்பட்டு கொஞ்சம் காசு
மிச்சம் பிடித்து - தள்ளாடி
நடந்து வந்தான் "அன்பு மகன்” -
நாளை அவன் காதலியோடு
கடற்கரையில்
சுண்டல் தின்னும்
கனவோடு....!!!???

எழுதியவர் : KS Kalai (9-Jul-12, 9:02 am)
பார்வை : 303

மேலே