உன் மகளாகப் பிறக்க

அம்மா. . .
நீ என் வார்த்தைகளையும் வசந்தங்களையும்
வருடல்களால் உயிர்
தந்தவள்!
அம்மா
நீ என் துக்கங்களையும்
தூக்கங்களையும்
மடியில்
தாங்கியவள்!
அம்மா
நீ என் எண்ணங்களையும் ஏக்கங்களையும்
தோழியாய்
வாங்கியவள்!
அம்மா
உனக்கு நான் பரிசளித்தது
பாசங்களை விட
கோபங்களைத் தான்!
எந்த ஜென்மப் புண்ணியம் ?
எப்படியோ
உன் மகளானேன்!
¤எனக்கு வேறு யார் வேண்டும்
உன்னை விட!
நீ ஒப்பற்றவள்
உன்னிடம் மட்டும்
நான்
விருப்பமுடன்
விலங்கிட்டுக்
கொள்கிறேன்!

எழுதியவர் : குட்டி ராஜேஷ் (13-Jul-12, 11:31 am)
சேர்த்தது : Soundaryaa
பார்வை : 147

மேலே