ஒளி..
இருளைக்கிழித்து
இன்னலை போக்கும்
அருளைக்கொடுத்து
அகிலத்தைக்காக்கும்
ஒளி…
இரவை முடித்து
பகலை வழங்கும்
உறவை வளர்த்து
உயிராய் மாறும்
ஒளி…
நிலவை நனைத்து
நிரப்பி விடும்
உலகம் உயிற்க
உன்னத மருந்தே
ஒளி…
அறிவின்; கரமாய்
அழைத்துச்செல்லும்
வறியோர் பெரியோர்
வாழவும் உதவும்
ஒளி…
விடியல் என்று
விளக்கும் கொடுக்கும்
நொடியில் துன்பத்தீ
நீங்க உதவும்
ஒளி…
துணைகள் இன்றியே
தூணாக இருக்கும்
இணையில்லா மகிமை
இயற்கையின் அருமை
ஓளி…