காதல் புரிந்தால்..!!!

எருமையாக இருக்கிறாயே
வெறும் வார்த்தையை
விதைக்கிறாயே
இந்தக்காதல் இல்லாவிட்டால்
இன்னொரு காதல்
என்றே தான்
நினைக்கிறாயே
காதல் என்பது இதுவோ…??
மௌனங்கள்
மனம் அறுக்க
தருணங்கள்
உயிர்குடிக்க
நீயின்றி
இனி
நானில்லையென்ற
நிலை பிறந்தபின்
உள்ளமும் உதடும்
ஒருமித்து சொல்லும்போது
உயிர்த்துடிப்பை
உணரமுடியும்..!!!
இரு ஜீவன்கள்
ஒரு ஜீவனாவது
தெரியும்..!!!
மொட்டுக்களின் உயிர்த்திறப்பை
பூக்களின் பிரசவத்தையும்
ஒரு நொடியில்
மெய்சிலிர்ப்பில்
பார்க்கமுடியும்..!!!

அதை நீ உணர
ஆண்டுகள் ஆகலாம்
அல்லது
அதை நீ
உணராமலும் போகலாம்
வலிகொடுக்கும்
காதலிலும்
வாழ்ந்துபார்
வாழ்வின் உன்னதம்
உனக்கும் தெரியும்
உண்மை புரியும்.

எழுதியவர் : (13-Jul-12, 9:44 pm)
பார்வை : 223

மேலே