அழகாக்கிக்கொள்
தன்னை மறந்து
உள்ளம் திறந்து
தன்னையே மறக்கிறதே!
நீல வானம் கண்டு
உன் சிறகை விரிக்கின்றாயே
மழையைப் பார்த்தா !
மலர்களோடு நிலவும்
ஆடல் புரியக் கண்டு
நீ ஆனந்தம் கொள்வாய்
என்னை நினைத்து !
அழகாய் சிரிக்கும்
உன் செவ்விதழ் கண்டு
அழகை அழகாக்கு
அழகான வாழ்வை
பூக்கோலமாக்கு!