காலக் கண்ணாடி
எந்த உணர்வும்
எந்த சிந்தனையும்
நிலையானதல்ல
எல்லாவற்றையும் கடந்த பின்னும்
எல்லா காலத்தும்
நிலைத்தவை ஆகிறது
சங்க இலக்கியத்தில் !
நெல்லும் நீரும்
உயிரன்றேயயினும்
மன்னன் உயிர்த்தே
உலகம் வாழும்
மன்னுயிர்கட்கெல்லாம்
தானைத் தலைவனாய் !
வீடுகளிலெல்லாம்
கலைகள் குவிய
வீதிகளிலெல்லாம்
பள்ளிகள் தொடர
நாடுகளெல்லாம்
ஊர்களைத் தோற்ற
நகர்களெல்லாம்
பல பள்ளிகளாய் !
எழுத்துக்களை புதுப்பிப்பன
விதைகளாய்
இதயத்தில் தூவுகின்றன
செழிப்பாய்
வளர்வது மனிதன் அல்ல
சமுதாயமே!