செந்நீர் துளிகள்

உன்னில் உன்னைத் தேடு
உன் உப்பு நீர்
பதில் சொல்லும் !

தினந்தோறும்
தினக்கூலி
தினச் சுமை
வழியெல்லாம்
வியர்வைத் துளிகள் அல்ல
செந்நீர் துளிகள் !

ஏழைகள்
கனவு கண்டால்
வாழ்க்கை
வசந்தமே
என்றென்றும் !

என் செந்நீர் துளிகள்
விலை பேச நீ யார்?
உன்னில் இருக்கிறதே
கேள்? அதற்கு
விலை?

என்னை நானே
சவுக்கடி கொடுக்கின்றேன்
ஏன் விழுகிறாய்
பள்ளத்தில் என்று !

களைகள் அல்ல
நச்சு விதை அல்ல
சுமை அல்ல என்றும்
எங்கள் வேர்களைப்
பிடுங்க நீ யார்?

உன்னை நீ போடு
ஏலமோ?
குத்தகையோ?
நாங்கள்
வாங்கிக் கொள்கிறோம்
உழைப்பை மட்டுமே!

எழுதியவர் : செயா ரெத்தினம் (13-Jul-12, 10:20 pm)
Tanglish : senneer thulikal
பார்வை : 305

மேலே