திருநாளை.......
மஞ்சத்தில் இவ்வேளை....
மலருமோ.....
மறுகாலை!
ஒருவேளை,
மணநாள் தருமோ
வாழ்வில் திருநாளை....
எதிரும் புதிருமாய்
எண்ணங்கள்....
எழுவதற்க்குமுன்
ஏன்இந்த வண்ணங்கள்....
வேலைக்கு கிளம்பனும்,
எழுந்திருடாயென நண்பன் எட்டிஉதைக்க...
கனவும் கொட்டி இறைக்க....
கடந்தேன் இரண்டடி
கண்டேன் துண்டுச்சீட்டு காலடியில்....
என்ன எழுதி இருக்கு.....????
வாழ்வில்,
வேலை
தரும் திருநாளை.....ஒருவேளை.
Ok......ey....,, Good.... Morning.....
சிறு குறிப்பு:
எசேக்கியல் ஐயாவுக்கு, இதை படித்தவுடன் என் மீது சிறு கோபம் வரவாய்ப்புள்ளது....அனைத்தும் தமிழில் எழுதி....கடைசியில் ஆங்கிலத்தில் முடிந்தேன்.....மன்னிக்கணும் ஐயா...பொருத்தமாய் இருந்தது, எழுதிவிட்டேன்..விட்டுவிடுங்களேன் இச்சிறியனை...