குடிக்காக வாழாதே !!!

குடிக்காக வாழ்ந்தவன் இன்று
கூட்டமாய் வருகிறான்.
குடிக்கு அவன் உயிரை தானமிட்டு!

ஏழுக் குறுக்கு இரண்டு நெடுக்கில்
கட்டப்பட்ட வாகனத்தில் வருகிறான்!
வையகத்தில் வாழ்ந்து முடித்தவிட்டு...

எண்ண முடியாத கூட்டம்
கண்ணீருடன் வர...
எட்ட முடியாத உயரம் செல்கிறான்!
எட்டடியில் தோண்டப்பட்ட அவன்
இறுதி உறைவிடத்திற்கு......

வீட்டை பார்த்தபடி செல்கிறான்
விரிச்சோடிய இடுகாட்டிற்கு,
வீணாக குடித்தான் இவன்
உயிர் விரைவில் போவதற்கு!

இருந்தும் ஆடி வருகிறது
ஒரு குடிகார கூட்டம்..
குடித்தே இறந்து போனவன்
இறுதி ஊர்வலத்தின் முன்னால்!

குடியை மட்டும் உண்டவன் இன்று
மண்ணிற்கு உணவாகிறான்

உணவானவனுக்கு உணவு
தீயில் வேகுகிறது!!
அவனுக்கு படைத்து உறவினர் உண்ண......

புகையாய் போனவனின் புகைப்படம்
இறுதியாய் மாட்டப்பட்டது
இல்லத்தின் ஒரு ஓரத்தில்......
குடித்தே அழிந்தவன் குடும்பம்
கண்ணீரில் மூழ்குது இன்று சோகத்தில்.....

எழுதியவர் : Golden Prabhuraj (19-Jul-12, 7:05 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
பார்வை : 147

மேலே