ரத்தத்த சிந்தனுங்க

தேன் மழையே!
தெவிட்டாத வான் மழையே !
ஆதிகாலத்தில் நீ ஆரோக்கியம் தந்தாய்
ரத்தமும் சேறுமாய் உருவான பணக்காரர்களின்
சதி வலையால்
அமில மழை பொழியுது பார்!
அகங்காரம் உயருது பார்!

உருண்டையான உலகமடா!
உருப்படாத உலகமடா!
உதிரம் சிந்தும் உலகமடா!
ஏழையின் கண்ணீரைக் கூட
காசாக்கும் உலகமடா!

கதறி அழுகுது பார்!
கண்ணீர் வடிக்குது பார்!
நகரத்து மனிதன் இங்கே
நடை பாதையில் உறங்குவதைப் பார்!
உதிரத்தைக் காசாக்கி
உலகம் பிழைக்குது பார்!

வட்டிக்குப் பணம் வாங்கி
வசந்தத்தை தொட்டிடத்தான்
மனிதனும் ஏங்குறானே
ஏக்கம் இன்னும் தீரலியே!
ஏழ்மை இன்னும் சாகலியே!

சுதேசி பேசிய காந்திமகான்
நம்ம நாட்டு கரென்சியில
சுகமாத் தூங்குறாரு
பாவிப்பய தேசத்த
பகாசுரக் கம்பெனிக
பாதி முழுங்கிடுச்சு
மீதியும் முழுங்கிடத்தான் துடிக்குது

நம்ம நாட்டு கரென்சியில
காந்தி சிரிக்குறாரு
காந்தி மீது
கவலையில்லா கூட்டமொன்று
படுத்து உறங்குது பார்!

படுத்து உறங்கும் கூட்டத்த
பாடையில ஏத்தணுங்க
தேசத்த பொதுவுல மாத்தணுங்க
தூங்கியது போதுமுங்க
துயில் எழுப்பி மாத்திடுவோம்

தேசத்த பாதுகாக்க
ரத்தத்த சிந்தணுங்க!

எழுதியவர் : porchezhian (21-Jul-12, 4:31 pm)
பார்வை : 239

மேலே