காணாமல் போன கை குழந்தை -- காதல்
காதல்
காணாமல் போன ஒரு
கை குழந்தை !....
நீயும் நானும்
தொலைந்த குழந்தையை
தேடி பின்னர் நாமே
நமக்குள் தொலைந்தோம் !!
காதல்
பூமியில் பூத்த
முதல் பூ!
நீயும் நானும்
பூ பறிக்க செடி
வளர்த்தோம் பின்னர் நாமே
நமக்குள் வேறாகி மலர்ந்தோம் .
காதல்
கண்கள் வரைந்த
ஓவியம் !
நீயும் நானும்
ஓவியம் வரைய
வண்ணங்கள் வாங்கினோம் பின்னர் நாமே
நமக்குள் வானவில்லாகி போனோம் !!
காதல்
மரணம் இல்லாத
ஜனனம் .
நீயும் நானும்
இதோ இப்போது
மரணம் ஏக போகிறோம் பின்னர்
நமக்குள் ஜனனம் ஆகும்
காதல் என்னும் ஒரு குழந்தை..
காணாமல் போன கை குழந்தை !